பிறர் நோயும் தன் நோய் போல் போற்றி அறனறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று கலித்தொகை கூறுகிறது.
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்று நற்றிணை கூறுகிறது.
மருந்தே ஆயினும் விருந்தோடு உண். அவ்வையார் தனிப்பாடல்
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பது போல்-மோசிகீரனார்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைப்பட சேய ஆயினும் தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் சான்றோர் பால ஆப சாலார் சாலார் பாலர்ஆகுபவே-கண்ணகனார்
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் -நரி வெரூஉத் தலையார்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
அன்பெனப்படுவது தன் கிளைசெறா அமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
செம்புலர் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே-குறுந்தொகை
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே-குறுந்தொகை
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு-கலித்தொகை
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவருக்கு அல்லது மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும். சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லது நீரிலே பிறப்பினும் நீருக்கு அவை தான் என் செய்யும்.-கலித்தொகை
செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே-கோப்பெருஞ்சோழன்
வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே-அவ்வையார்
பெரியவர் கேண்மை பிறை போல நாளும் வரிசை வரிசையாக நந்தும். வானூர் மதியம் போல் வைகலும் தெய்வமே தானே சிறியார் தொடர்பு.
மனைக்கு விளக்கம் மடவாள் மடவாளுக்கு விளக்கம் புதல்வர் புதல்வருக்கு விளக்கம் கல்வி கல்விக்கு விளக்கம் புகழ்ச்சால் உணர்வு
நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும் குளத்துக்கு அணி தாமரை பெண்ணுக்கு அணி நாணம்
ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிதே
இறைத் தோறும் ஊறும் கிணறு
கற்றலில் கேட்டலே நன்று
குலவிச்சை கல்லாமல் பாகம் படும்
குன்றின் மேல் இட்ட விளக்கு
நிறைகுடம் நீர் தழும்பல் இல்
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
திரைகடல் ஓடியுன் திரவியம் தேடு
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் வெற்றி வேற்கை
மதியது மதியது பெண்ணே புண்ணிய வதிஅல்லவோ மகராசி கண்ணே
மலையிடை பிறவா மணியே
முள்ளுடை காட்டில் முதுநரி ஆகுக
பசியும் பிணியும் நீங்கி வசியும் வளமும் சுரக்க என வாழ்த்தி
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான் பொருள் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுதுணையாவது.
மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை பொய் வகையின்றி தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி உயிர்வகை உயிரை தேயாது ஒழுகுதல் ஒழுக்கம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்முடி வழக்கமெல்லாம் மண் முடி போக
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில்
கல்லாரை காணுங்கால் கல்வி நல்கா கசடருக்கு தூக்கு மரம் அங்கே உண்டாம்