பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பொது

தனித்து இருக்கும் போது

பொதுநலமும்

பொதுவில் இருக்கும் போது

சுயநலமும்

புகுந்து விடுகிறது 

வியாழன், 16 பிப்ரவரி, 2023

பொன்னான பொன்மொழிகள்

இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

உன் உழைப்பு ஒவ்வொன்றும் வெறும் வியர்வை அன்று. ஒவ்வொன்றும் வைரக்கல்.

உனக்கு நீயே நீதிபதியாக இரு. அப்போது தான் உன் தவறுகளுக்கு நீ தண்டனை தர முடியும்.

உன் மனச்சாட்சியே கடவுள். உன் கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இரு.

சிறகுகளை விரித்தால் பறக்கலாம். சிந்தையை அடக்கினால் செய்கையில் சிறக்கலாம்.

ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்.

பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பதல்ல. பலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

அஞ்சாமை தான் அறியாமை என்னும் மலையைத் தகர்த்து உடைக்கும் அணுகுண்டு

எந்தச் செயல் உன்னை வலிமையானவனாக உணர வைக்கிறதோ அச்செயலைத் திரும்பத் திரும்பச் செய்

வலிமை தான் வாழ்வு. வலிமைதான் மகிழ்ச்சி. பலவீனம் இடைவிடாத சித்திரவதை ஆகவும் துன்பமாகவும் அமையும் என்பதால், உனது வலிமையைப் பெருக்குவதிலேயே உன்னுடைய வாழ்க்கையைச் செலவிடு.

மலைகளைத் தகர்க்கும் மன உறுதி வேண்டும். தோல்வியுற்ற வாழ்க்கை வாழ்வதைவிட போர்க்களத்திலே போரிட்டு மடிவதே மேல். தோல்வியுற்ற வாழ்க்கை துயரமானது. வென்றே ஆக வேண்டும்.

ஒவ்வொருவரும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சம் மீதியின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையும் சாதிக்க இயலாது.

அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவற்ற பொறுமை இவை நான்கும் அவசியம்.

எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேதான் இருக்கின்றன. அதை நீ உணர வேண்டும் என்றால், நீ உன் மீது அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

மரணம் என்பது உடையை மாற்றுவது போலதான். அதனால் மரணத்திற்கு அஞ்சாதே.

சனி, 13 ஆகஸ்ட், 2022

கொடிப்பாடல்

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே 
பாங்கின் எழுதித் திகழும்- செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்- எங்கும் 
காண்அரும் வீரர் பெரும் திருக்கூட்டம் 
நம்பற்குஉரியர் அவ்வீரர் -தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்


திங்கள், 11 ஜூலை, 2022

காமராசர் பேச்சுப்போட்டி- வகுப்பு 2

இங்கே கூடியிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்ணுக்குள் இருக்கின்ற கரி தான் வெட்ட வெட்ட வைரமாய் மின்னுது. 

அதுபோல, 

    1. ஒருபுறம் வறுமை வாட்ட வாட்ட, 
    2. மறுபுறம் விடுதலை வேட்கை மேலே ஏழ ஏழ, 
    3. இன்னொரு புறம் சிறையில் துன்பம் வருத்த வருத்த, 
    4. தியாகச் சுடராய், வேள்வித்தீயாய், 
    5. நம் தேசத்திற்கு அழியாத விளக்காய் ஒளி தந்தவர் காமராசர்.

  • தமிழகத்தின் தவப் புதல்வர்
  • தாயகம் காத்த புனிதர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப் பங்காளர் என்று பாராட்டப்பட்டவர்
  1. அரசியலைச் சுத்தப்படுத்தியவர்
  2. ஆட்சியில் நேர்மை செலுத்தியவர்
  3. பள்ளிக்கூடங்கள் பல திறந்தவர்
  4. மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர்
  5. வளர்ச்சித் திட்டங்கள் பல தீட்டி, நாட்டை வளப்படுத்தியவர்

  • ஏழை எளியோர் வாழ்வில்  நல்லொளி பாய்ச்சிய நம்பிக்கை நட்சத்திரம்.
  • கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளில், அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம், வாரீர்.
நன்றி! வணக்கம்.

செவ்வாய், 29 மார்ச், 2022

மாணவர் உறுதிமொழி

அரசுப் பள்ளி மாணவனாகிய நான்,

1) எனக்குக் கல்விப் போதிக்கும் ஆசிரியர்களை மதித்துப் போற்றுவேன்.
2) எனக்கு வயதில் மூத்தோரை மதித்து நடப்பேன்.
3) படிப்பில் முழுக்கவனம் செலுத்துவேன்
4) இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் ஆவார்கள்
5) யாருடைய மனமும் புண்படும்வகையில் தீய சொற்களைப் பேச மாட்டேன்
6) மது மற்றும் புகைப்பழக்கத்தில் ஈடுபட மாட்டேன் 
7) பள்ளிச் சொத்துக்களைச் சேதப்படுத்த மாட்டேன்.
8) ஒழுக்கமே எனது பண்பாடு. ஒழுக்கமே எனது உயிர். ஒருபோதும் ஒழுக்கம்தவறி நடக்க மாட்டேன் 

என்று உளமாற உறுதி கூறுகிறேன்.