இன்று காலை 8.10 மணி அளவில் சாட்சியாபுரம் பெட்ரோல் பங்க் எதிரில் டாட்டா ஏசியை ஓட்டிவந்த நாய், விளையாடிக்கொண்டிருந்த நாய் மீது மோதிவிட்டது. நாயின் குடல் சரிந்து துடிப்பு நின்றது. அந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாய்கள் செய்வதறியாது திகைத்து, குடல் சரிந்த நாயையும் டாட்டா ஏசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு லொள்...லொள்... என்று குரைத்தன. அந்த "லொள்...லொள்..." குரைப்பின் பொருள் என்னவென்று எனக்குத் தெளிவாகவே புரிந்தது.
அடப்பாவி... நாங்கள் என்ன துரோகம் செய்தோம் உனக்கு?... ஏன் என் நண்பனைக் கொன்றாய்? இந்தப் பூமி நீ வாழ்வதற்கு மட்டுமா? இந்த நாய் ஜென்மம் உயிர் வாழக் கூடாதா? கடவுள் இந்தப் பூமியை உனக்காக மட்டும்தான் படைத்தாரா? காலங்காலமாய் நாங்கள் உங்களுக்கு நாயாய் இருந்து அடிமை வேலை செய்தோம் இல்லையா? இதற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? துக்கமும் அழுகையும் தொண்டையை அடைக்க அவை குரைத்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக